வீட்டுத் துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ளல்
உங்களது துணைவரின் அல்லது முன்னைய துணைவரின் நடத்தை வழமையானதா என நீங்கள் ஆச்சரியப்படலாம். அல்லது…
துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு நீங்கள் இன்னும் தயாராக இல்லையென்றாலும், சான்றுகளைச் சேகரிப்பது முக்கியமாகும். உதாரணமாக, வீட்டுவசதி, வதிவிட உரிமைகள் அல்லது விவாகரத்து மற்றும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு போன்றவற்றில் உங்கள் உரிமைகளைப் பின்னர் பயன்படுத்துவதற்கு இது உங்களுக்கு உதவக்கூடும்.
23/02/2024 அன்று மைட்ரே பாலின் ரோங்கியர் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
Verified by Women for Women France on 23/02/2024
உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்களிடம் மற்றும்/அல்லது உங்கள் பிள்ளைகளிடம் துஷ்பிரயோகமான அல்லது கட்டுப்படுத்தும் நடத்தையை வெளிப்படுத்தினால், சான்றுகளைச் சேகரிப்பது முக்கியமாகும்.
இன்று துஷ்பிரயோகத்தைத் தெரிவிப்பதற்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் வீட்டுவசதி, குடியேற்றம், விவாகரத்து மற்றும் பிள்ளைப் பொறுப்புக் காப்பு தொடர்பான உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு இந்தச் சான்று உங்களுக்கு உதவக் கூடும்.
சான்றாக எதைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க உதவும் வகையில் கீழே உள்ள பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
புகாரைப் பதிவு செய்வதற்கு முன் மற்றும்/அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நீதிபதியிடம் விண்ணப்பிக்கும் முன் நீங்கள் சான்றுகளைச் சேகரிக்க வேண்டியதில்லை. உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதலாவதாக முன்னுரிமையானது.
நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்:
பின்வருவனவற்றை விவரப்பதற்கு ஒரு நாட்குறிப்பை வைத்திருக்கவும்:
நீங்கள் இதை நிகழ்நிலையில் செய்யலாம், உதாரணமாகப் பாதுகாப்பான Mémo de Vie பணித்தளத்தில் (பிரெஞ்சு மொழியில் மட்டுமே கிடைக்கும்). இது நடத்தைச் சாட்சிப் பத்திரங்கள், வாழ்க்கைக் கதைகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் என்பவற்றைச் சேமிப்பதற்கு உங்களை அனுமதிக்கிறது.
துஷ்பிரயோகத்தின் ஒப்புக்கொள்ளல்கள், துஷ்பிரயோகத்திற்காக மன்னிப்புக்கோரல்கள், அவமதிப்புகள், அச்சுறுத்தல்கள், கட்டுப்படுத்தலுக்கான முயற்சிகள் அல்லது தொல்லை கொடுக்கின்ற நடத்தைகள் போன்று அவர்களிடமிருந்து நேரடியாக வரும் சான்றுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக:
உதாரணமாகச் சிராய்ப்புக் காயங்கள், காயங்கள் அல்லது வடுக்கள்.
நீங்கள் வயது வந்தவராக இருந்தால் (18 வயதிற்கு மேல்), மருத்துவ ஊழியர்கள் மருத்துவ இரகசியத்தை மதிக்க வேண்டும், மேலும் உங்கள் அனுமதியின்றி துஷ்பிரயோகத்தைத் தெரிவிக்க முடியாது.
சாத்தியமென்றாலும் நீங்கள் அவ்வாறு செய்வது பாதுகாப்பானதென்றாலும், துஷ்பிரயோகம் நடைபெறுவதை விவேகமாகப் பதிவு செய்யவும் அல்லது படமெடுக்கவும். உதாரணமாக, உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்திக் குரல் பதிவைத் தொடங்கலாம்.
இதைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது. நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே இதைச் செய்யவும்.
சாத்தியமெனில், துஷ்பிரயோகத்தின் அடையாளங்கள் உள்ள பொருட்களை அல்லது ஆடைகளைப் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும் அல்லது அவற்றைப் புகைப்படம் எடுக்கவும்.
இதைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது. நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே இதைச் செய்யவும்.
பின்வருவனவற்றைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ நடத்தைச் சாட்சிப் பத்திரத்தை வழங்குமாறு உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கவும்:
ஒவ்வொரு சாட்சி அறிக்கையும் திகதியிடப்பட்டு, கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் சாட்சியின் அடையாள அட்டையின் நகலுடன் அது இணைக்கப்பட வேண்டும். உங்கள் சாட்சி அறிக்கைகளுக்காக இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அதை அச்சிடலாம் அல்லது சாட்சி அறிக்கைக்கான டெம்ப்ளேட்டாக ஒரு தனித் தாளில் பயன்படுத்தலாம்.
நீங்கள் கலந்தாலோசிக்கும் சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் சான்றாகச் செயல்படும் ஆவணங்களை எழுத முடியும். உதாரணமாக:
உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தெரிந்த தொழில் வல்லுநர்களிடம் அறிக்கையொன்றை அல்லது “attestation” ஐ வழங்குவதன் மூலம் சான்றுகளை வழங்குமாறு கேட்கவும்.
இது ஒரு சமூக சேவகராக, வழக்கறிஞராக, பள்ளி ஆசிரியராக அல்லது உங்களுக்கு உதவிய "association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பொன்றாகக் கூட இருக்கலாம்.
ஒவ்வொரு சாட்சி அறிக்கையும் திகதியிடப்பட்டு, கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் சாட்சியின் அடையாள அட்டையின் நகலுடன் அது இணைக்கப்பட வேண்டும்.
உங்கள் சாட்சி அறிக்கைகளுக்காக இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அதை அச்சிடலாம் அல்லது சாட்சி அறிக்கைக்கான டெம்ப்ளேட்டாக ஒரு தனித் தாளில் பயன்படுத்தலாம்.
உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் பணத்திற்கும் ஆவணங்களுக்குமான உங்கள் அணுகலைக் கட்டுப்படுத்தினால் அல்லது அச்சுறுத்தினால், பின்வரும் சான்றுகளை வைத்திருக்கவும்:
துஷ்பிரயோகமான அல்லது ஆதிக்கம் செலுத்துகின்ற நடத்தைக்கான எந்தச் சான்றையும் வைத்திருக்கவும்:
ஒவ்வொரு சாட்சி அறிக்கையும் திகதியிடப்பட்டு, கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் சாட்சியின் அடையாள அட்டையின் நகலுடன் அது இணைக்கப்பட வேண்டும். உங்கள் சாட்சி அறிக்கைகளுக்காக இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அதை அச்சிடலாம் அல்லது சாட்சி அறிக்கைக்கான டெம்ப்ளேட்டாக ஒரு தனித் தாளில் பயன்படுத்தலாம்.
இதைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது. சாட்சிகள் உங்கள் துணைவரிடம் அல்லது முன்னாள் துணைவரிடம் சொல்ல மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே இதைச் செய்யவும்.
நீங்கள் புகாரொன்றைப் பதிவு செய்யத் தயாராக இல்லை எனில், எந்தவொரு பொலீஸ் நிலையத்திலும், அதாவது ஒரு “commissariat de police” இல் அல்லது “brigade de gendarmerie” இல் பதிவொன்றை அல்லது “main courante” ஐச் சமர்ப்பிப்பதன் மூலம் துஷ்பிரயோகத்தை இலகுவாகப் புகாரளிக்கலாம்.
இந்த பதிவு நீங்கள் புகாரளிக்கும் உண்மைகளைப் பதிவு செய்யும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இது பொதுவாக விசாரணையொன்றைத் தூண்டுவதில்லை.
குறிப்பு: iவீட்டுத் துஷ்பிரயோக வழக்கொன்றில், பதிவை அல்லது “main courante” ஐ அரசு வழக்கறிஞருக்கு அல்லது “procureur de la République” இற்கு அனுப்ப வேண்டிய கடமை பொலிசாருக்கு உள்ளது. வன்முறை மிகவும் தீவிரமானதாகக் கருதப்பட்டால், அவர்கள் விசாரணையை மேற்கொள்வதற்கும், குற்றவாளி மீது வழக்குத் தொடரவும் முடிவு செய்யலாம்.
இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.
"Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.
வீட்டுத் துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ளல்
உங்களது துணைவரின் அல்லது முன்னைய துணைவரின் நடத்தை வழமையானதா என நீங்கள் ஆச்சரியப்படலாம். அல்லது…
நீங்கள் இன்னும் ஒன்றாக வாழும்போது பாதுகாப்பு உத்திகளை வைத்திருத்தல்
எல்லா வகையான காரணங்களுக்காகவும், உங்கள் துணைவரை அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தங்குமிடத்தை…
உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வீட்டுத் துஷ்பிரயோகத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளல்
வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த…