மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான பிள்ளைப் பராமரிப்பு
பிரான்சில், மூன்று வயது முதல் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பள்ளி வருகை கட்டாயமாகும். உங்கள் பிள்ளைகள்…
பல்கலைக்கழகத்தில் படிப்பது ஒரு பட்டம் பெற உங்களை அனுமதிக்கும், இது பிரான்சில் வேலை தேடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது சில தொழில் முயற்சிப் பிரவேசங்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். பிரஞ்சு நாட்டவர் அல்லாதவர்கள் சில நிபந்தனைகளின் கீழ் பிரான்சில் படிப்பில் சேரலாம்.
29/09/2023 ஆம் திகதி ஒவுர்டா வர்டா சொடோவ்டியால் சரிபார்க்கப்பட்டது
Verified by Ouarda Varda Sadoudi on 29/09/2023
நீங்கள் பல்கலைக்கழக பட்டமொன்றைப் பெற விரும்பினால், பிரான்சில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் சேருவதை நீங்கள் பரிசீலிக்கலாம்.
பல்கலைக்கழகப் பாடநெறியொன்றில் சேர நீங்கள் எடுக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் படிகளை கீழே காணலாம்.
சான்றளிக்கப்பட்ட பயிற்சி உட்பட தொழில்சார் பயிற்சியை நீங்கள் தொடர விரும்பினால், எங்களின் பிரத்தியேக பக்கத்தை பார்வையிடலாம்.
பிரான்சில் வெவ்வேறு வகையான உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன, அவற்றுள்:
பல்கலைக்கழகக் கல்வி மூன்று சுழற்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சுழற்சியின் முடிவிலும் நீங்கள் பட்டமொன்றைப் பெறலாம்.
முதல் சுழற்சி மூன்று ஆண்டுகள் நீடிக்கும். மூன்று வருடங்கள் “Licence 1”, “Licence 2” மற்றும் “Licence 3” என்று அழைக்கப்படுகின்றன.
நீங்கள் தொடர்ந்த பாடநெறியின் அடிப்படையில் இந்த சுழற்சி முடிவில், “Licence” அல்லது “Bachelor” எனப்படும் பட்டத்தைப் பெறலாம். நீங்கள் இப்போது “Bac+3” மட்டத்தைப் பெற்றுள்ளீர்கள்.
இரண்டாவது சுழற்சி இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். இந்த வருடங்கள் “முதுகலை 1” மற்றும் “முதுகலை 2” என்று அழைக்கப்படுகின்றன.
இந்த சுழற்சி முடிவில், நீங்கள் “முதுகலை”அல்லது முதுகலை பட்டம் பெறலாம். நீங்கள் இப்போது “Bac+5” மட்டத்தைப் பெற்றுள்ளீர்கள்.
மூன்றாவது சுழற்சி மூன்று ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் கலாநிதி பட்டக் கற்கைக்குச் சமமானதாகும்.
கலாநிதி பட்டத்தின் முடிவில், “Doctorat” என்ற பட்டத்தை நீங்கள் பெறலாம்.
பிரான்ஸில் உள்ள படிப்புகள் தேசிய இனத்தைப் பொருட்படுத்தாமல் எவரும் தொடர முடியும்.
இருப்பினும், நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
பின்னர் பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த நிபந்தனைகளை அமைக்கின்றன. உதாரணமாக, சிலருக்கு குறைந்தபட்சம் B2 அளவு பிரஞ்சு தேவைப்படுகிறது.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம், இறுதியில் பெறப்பட்ட பட்டம், ஆனால் உங்கள் தேசிய இனம் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது பல்கலைக் கழகப் படிப்புகளுக்கான பதிவுச் செலவு மிகவும் மாறக்கூடியது.
நீங்கள் பிரெஞ்சுக்காரராக இல்லாவிட்டாலும் கூட, உங்கள் படிப்புகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு புலமைப்பரிசில்கள் அல்லது “bourses” என அழைக்கப்படும் நிதி உதவியைப் பெறுவது சில சந்தர்ப்பங்களில், சாத்தியமானது.
நீங்கள் ஆர்வமுள்ள பல்கலைக்கழகங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு அவற்றின் கட்டணங்கள் மற்றும் “bourses” ஆகியவற்றைக் கண்டறியலாம்.
இந்த இணையதளத்தில் உங்களுக்கு அருகில் உள்ள உயர்கல்வி நிறுவனம் அல்லது “établissement d’enseignement supérieur” ஐத் தேடலாம்.
பல்கலைக்கழக படிப்புகளுக்காக பதிவு செய்தல் பொதுவாக மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.
பதிவுசெய்தல் அட்டவணை மற்றும் எவ்வாறு தொடரலாம் என்பதைப் பற்றி அறிய, நீங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தை நேரடியாகத் தொடர்புகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்கள் விரும்பும் பட்டப்படிப்பின் மட்டம், நீங்கள் தற்போது வசிக்கும் நாடு மற்றும் உங்கள் குடியுரிமை உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து பாடநெறிகளுக்கு பதிவுசெய்யும் செயல்முறை தங்கியிருக்கும்:
வேறொரு நாட்டில் நீங்கள் பெற்ற தகமைகள் சில நிபந்தனைகளின் கீழ் பிரான்சில் அங்கீகரிக்கப்படலாம்.
இதைக் கோருவதற்கு, “centre ENIC-NARIC” என அறியப்படும் பெரும்பாலான பாடப் பகுதிகளில் தகமைகளை அங்கீகரிக்கும் ஆவணங்களை வழங்குவதற்குப் பொறுப்பான திணைக்களத்தை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். />":
பின்வருபவை பொதுவாக உங்கள் விண்ணப்பத்தில் சேர்க்கப்பட வேண்டும்:
உங்கள் ஆவணங்கள் பிரெஞ்சு மொழியில் இல்லை என்றால், அவை முதலில் “traducteur assermenté” எனப்படும் சத்தியப்பிறமாணம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட வேண்டும்:
“Pôle Emploi” என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவுகிறது, மேலும் தொழில்முயற்சி உருவாக்கம் குறித்து ஆலோசனை வழங்க முடியும். அவர்கள் “chômage” என பொதுவாக அறியப்படும் பிரெஞ்சு வேலையின்மை கொடுப்பனவுகள் அல்லது “allocations de retour à l’emploi”ஆகியவற்றையும் நிர்வகிக்கிறார்கள்.
சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.
மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான பிள்ளைப் பராமரிப்பு
பிரான்சில், மூன்று வயது முதல் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பள்ளி வருகை கட்டாயமாகும். உங்கள் பிள்ளைகள்…
அரச நிதி உதவியை கோருதல்
வரையறுக்கப்பட்ட நிதி வளங்களைக் கொண்ட மக்களுக்கு உதவ பிரெஞ்சு பொது அமைப்புகளால் பல வகையான நிதி…