உங்கள் பிரெஞ்சு சிவில் நிலை ஆவணங்களில் உங்கள் வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்யப்பட்டிருத்தல்
பிரான்ஸ் அல்லாத வேறு நாட்டில் நீங்கள் விவாகரத்துச் செய்திருந்தால், உங்களிடம் பிறப்புச் சான்றிதழ்…
பிரான்சில்,வெளிநாட்டில் அங்கீகரிக்கப்படக்கூடிய விவாகரத்தொன்றைப் பெறுவதற்கான நடைமுறை கேள்விக்குரிய நாட்டைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு நாட்டிற்கும் வெளிநாட்டு விவாகரத்துத் தீர்ப்பொன்றை அங்கீகரிப்பதற்கு அதன் சொந்த நடைமுறை உள்ளது.
நீங்கள் பிரான்சில் விவாகரத்துப் பெற்றிருந்தால், விவாகரத்துத் தீர்ப்பை வேறொரு நாட்டிற்குப் பொருந்தக்கூடியவாறு ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் அந்த நாட்டைக் கேட்க வேண்டியிருக்கலாம்.
30/04/2022 அன்று மைத்ரே ஹன்சு யாலாஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
Verified by Maître Hansu Yalaz on 30/04/2022
ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்ப்புகளின் சுதந்திர இயக்கத்தின் கொள்கை உள்ளது.
இதன் அர்த்தம் என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகளில் பிரெஞ்சுத் தீர்ப்புகள் பொருந்தும், அதே போல் பொருந்தாமலும் இருக்கும்.
ஐரோப்பிய சான்றிதழ் அல்லது “certificat européen” எனப்படும் ஆவணத்திற்காக உங்கள் விவாகரத்தை வழங்கிய நீதிமன்றத்திடம் உங்கள் வழக்கறிஞர் கேட்க வேண்டும்.
உங்கள் விவாகரத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஆவணம் நிரூபிக்கும். வேறொரு நாட்டில் சில நிர்வாக நடைமுறைகளின் போது நீங்கள் அதைப் பற்றிக் கேட்கப்படலாம்.
வெளிநாட்டு விவாகரத்துகளை அங்கீகரிப்பதற்கான நடைமுறையைக் கண்டறிய உங்கள் நாட்டில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
உதாரணமாக, தகவலுக்காகப் பிரான்சில் உள்ள உங்கள் தூதரகத்தை அல்லது இணைத்தூதரகத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் பிரான்சில் அரசியல்சார் அகதியாக இருந்தால், நீங்கள் பிறந்த நாட்டின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது.
அதற்குப் பதிலாக, அகதிகளின் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற “association” எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.
“point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.
“Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
உங்கள் பிரெஞ்சு சிவில் நிலை ஆவணங்களில் உங்கள் வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்யப்பட்டிருத்தல்
பிரான்ஸ் அல்லாத வேறு நாட்டில் நீங்கள் விவாகரத்துச் செய்திருந்தால், உங்களிடம் பிறப்புச் சான்றிதழ்…
பிரான்சில் வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல்
நீங்கள் வெளிநாட்டில் விவாகரத்து செய்திருந்தால், உங்கள் விவாகரத்துத் தீர்ப்பை பிரான்சில்…
எந்த நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளல்
உங்கள் தேசியம், உங்கள் வாழ்க்கைத் துணையின் தேசியம், நீங்கள் திருமணம் செய்து கொண்ட நாடு மற்றும்…
பிரான்சில் விவாகரத்து
நீங்கள் பிரான்சில் உங்கள் சிவில் திருமணத்தை முடிக்க விரும்பினால், நீங்கள் பல வகையான விவாகரத்து…