மற்றொரு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பிரெஞ்சு விவாகரத்தொன்றைப் பெறுதல்
பிரான்சில்,வெளிநாட்டில் அங்கீகரிக்கப்படக்கூடிய விவாகரத்தொன்றைப் பெறுவதற்கான நடைமுறை கேள்விக்குரிய…
நீங்கள் வெளிநாட்டில் விவாகரத்து செய்திருந்தால், உங்கள் விவாகரத்துத் தீர்ப்பை பிரான்சில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், விவாகரத்துக்கான “exequatur” ஐப் பெறுவதற்கு பிரான்சில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
09/02/2024 அன்று மைத்ரே ஹன்சு யாலாஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
Verified by Maître Hansu Yalaz on 09/02/2024
இந்தக் கோரிக்கையைச் செய்ய நீங்கள் ஒரு பிரெஞ்சு வழக்கறிஞரைப் பணியமர்த்த வேண்டும்.
உங்கள் வழக்கறிஞர் “assignation en exequatur” என்ற உத்தியோகபூர்வ கோரிக்கையை அரச வழக்கறிஞர் அல்லது “procureur de la République” இற்கு அனுப்புவார்.
வெளிநாட்டுத் தீர்ப்பு பிரெஞ்சு தனியார் சர்வதேச சட்டங்களை மதிக்கிறது என்று “procureur de la République” கருதினால், அதாவது பிரான்சில் “opposable” எனக் கருதப்பட்டால், விவாகரத்தின் “exequatur”என்ற ஆவணத்தை அவர் உங்களுக்கு வழங்குவார்.
இந்த ஆவணத்தின் மூலம், உங்கள் விவாகரத்துத் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளின் கட்டாய அமுலாக்கத்தை நீங்கள் கோரலாம்.
மேலும் அறிய, பின்வரும் சந்தர்ப்பங்களில் கிடைக்கும் தீர்வுகள் பற்றிய தகவலை நீங்கள் காணலாம்:
“Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்பு தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.
“point-justice” எனப்படும் மையங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றன, மேலும் சில நேரங்களில் உங்கள் நிர்வாக நடைமுறைகளுக்கு உதவுகின்றன.
“Femmes Informations Juridiques Internationales Auvergne-Rhône-Alpes (FIJI)” என்பது சர்வதேச குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
மற்றொரு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பிரெஞ்சு விவாகரத்தொன்றைப் பெறுதல்
பிரான்சில்,வெளிநாட்டில் அங்கீகரிக்கப்படக்கூடிய விவாகரத்தொன்றைப் பெறுவதற்கான நடைமுறை கேள்விக்குரிய…