அவசரமாக நிதியை அணுகுதல்
உங்களிடம் நிதி வளங்கள் இல்லையென்றால் அல்லது உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் நிதிக்கான அணுகலைத் தடுத்திருந்தால், உங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட சில தீர்வுகள் உள்ளன. துரதிஷ்டவசமாக, இந்தத் தீர்வுகள் இன்னும் பிரான்சில் மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன.
27/11/2022 அன்று Ouarda Varda Sadoudi ஆல் உறுதிப்படுத்தப்பட்டது
Verified by Ouarda Varda Sadoudi on 07/12/2023
-
- நீங்கள் நம்பக் கூடிய உங்களுக்கு நெருக்கமானவர்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம்: உங்கள் அடிப்படைத் தேவைகளின் செலவுகளை ஈடுகட்ட, அவர்களில் ஒருவர் உங்களுக்கு கடன் அல்லது பணம் கொடுக்க முடியுமா?
- “associations” எனப்படும் இலவசச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உங்களுக்கு உதவ முடியும். உதாரணமாக, உணவை வழங்குவதன் மூலம் அல்லது இரவில் தங்குமிடத்தைக் கண்டறிய உதவுவதன் மூலம். இவற்றில் அடங்கும்:
- “Les Restos du cœur”: ருத்இந்த அமைப்பு உங்களுக்கு வீட்டில் சமைப்பதற்கான உணவு, சுகாதார பொருட்கள், உங்களுக்குப் பிள்ளை இருந்தால் பிள்ளைக்கான குறிப்பிட்ட பொருட்கள் அடங்கிய பார்சல்களை இலவசமாக வழங்க முடியும். அவர்கள் சூடான உணவை விநியோகிப்பதோடு வீடு இல்லாதவர்களுக்கு மையங்களையும் வழங்குகிறார்கள். பேசப்படும் மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
- Le Secours populaire”: சுயசேவை மளிகைப் பொருட்கள், குழந்தைத் தயாரிப்புகள் உட்பட எதற்கும் பணம் செலுத்தாமல் தேர்ந்தெடுத்து வாங்க இந்த அமைப்பு உங்களை அனுமதிக்கிறது. அவர்கள் ஆடைகளையும் பொருட்களையும் இலவசமாக வழங்க முடியும் பேசப்படும் மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
- “La Croix-Rouge”: இந்த அமைப்பு உங்களுக்குப் பல்வேறு வடிவங்களில் இலவச உணவை வழங்க முடியும்: பார்சல்கள், சூடான உணவுகள், பகிரப்பட்ட உணவுகள், சாண்ட்விச்கள் போன்றவை. அவர்கள் மளிகைக் கடைகளையும் வைத்திருக்கிறார்கள், அங்கு நீங்கள் பொருட்களின் உண்மையான மதிப்பில் 10 வீதத்தை மட்டுமே செலுத்தி கொள்வனவு செய்யலாம். அவர்கள் தங்கள் கடைகளில், பயன்படுத்திய ஆடைகளையும் குறைந்த விலையில் வழங்குகிறார்கள். பேசப்படும் மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
- உங்களுக்கு அவசரநிலைத் தங்குமிடம் தேவைப்பட்டால் தீர்வுகள் உள்ளன.
-
வங்கிக் கணக்கொன்றைத் திறப்பது
உங்களிடம் சொந்த வங்கிக் கணக்கு இல்லையென்றால், பணத்தைப் பெறுவதற்கு, விரைவில் வங்கிக் கணக்குஒன்றைத் திறக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை விடுவித்தல்
நீங்கள் பிரான்சில் பணிபுரிந்து, நிறுவனத்தின் சேமிப்புத் திட்டத்தின் அல்லது “Plan Epargne Entreprise” இன் ஒரு பகுதியாக உங்கள் நிறுவனத்தின் சேமிப்புக் கணக்கில் பணம் வைத்திருந்தால், வீட்டுத் துஷ்பிரயோகம் ஏற்படும் போது அதைப் பெறமுடியும் மேலும் அறிய உங்களை வேலையில் அமர்த்துபவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
“travailleur social”அல்லது சமூக சேவகருடன் சந்திப்பை ஏற்படுத்தல்
“travailleur social” அல்லது சமூக சேவகர் என அறியப்படும் ஒரு தொழில் வல்லுநருடன் சந்திப்பு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பாக நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் போது, உங்கள் தனிப்பட்ட சூழ்நிலை, உங்கள் நிர்வாக நடைமுறைகளின் ஆதரவின் அடிப்படையில் தீர்வுகளைக் கண்டறிய இந்த தொழில் வல்லுநர்கள் உங்களுக்கு உதவ முடியும், உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து குறைந்த விலை அல்லது இலவசப் பொதுப் போக்குவரத்து போன்ற கிடைக்கக்கூடிய பிற கருவிகளைப் பற்றியும் அவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம்.
“travailleur social” உடன் சந்திப்பை ஏற்படுத்த உங்களால் முடியும்:
- “Conseil départemental” எனும் உங்கள் பிராந்தியத்தின் நிர்வாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
- உங்கள் உள்ளூர் நகர மன்றம் அல்லது “mairie”ஐத் தொடர்புகொள்வதன் மூலம், உங்கள் நகரத்தில் உள்ள “Centre communal d’action sociale” எனப்படும் சமூக ஆதரவிற்குப் பொறுப்பான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
-
நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் நிறுவனத்தின் சமூகப் பணி உதவியாளரிடம் அல்லது “assistante sociale” உடன் சந்திப்பை ஏற்படுத்துங்கள் மேலும் அறிய உங்களை வேலையில் அமர்த்துபவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
வேலை தேடுதல்
நீங்கள் வேலை செய்யாமலும், உங்களுக்குப் பணம் தேவையுமிருந்தால், சில துறைகள் பெரும்பாலும் ஆட்களை விரைவாக வேலைக்கமர்த்துகிறது.
-
உங்கள் முன்னாள் துணைவரிடமிருந்து பணத்தைப் பெறுதல்
நீங்கள் திருமணமாகி அல்லது பிள்ளைகள் இருந்தால், நீதிபதியின் முடிவைத் தொடர்ந்து உங்கள் துணைவர் அல்லது மற்றைய பெற்றாரிடமிருந்து நிதிப் பங்களிப்பைப் பெறலாம்:
- நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் விவாகரத்து நடவடிக்கைகள் முழுவதும் நிதிப் பங்களிப்பை உங்கள் துணைவரிடமிருந்து பெறலாம்.
- உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், நீங்கள் பிரிந்ததன் விளைவாக அவர்களைப் பராமரித்தல் மற்றும் கல்வி கற்பதற்கான செலவுகளை ஈடுகட்ட நிதிப் பங்களிப்பை மற்றைய பெற்றாரிடமிருந்து பெறலாம்.
இருப்பினும், ஒரு நீதிபதியின் முடிவை எடுப்பதற்குப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.
நிதிச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல்
ஆனால் பொருளாதார வன்முறையை எதிர்கொண்ட பிறகும் நிதிச் சுதந்திரத்தை மீட்டெடுப்பது சாத்தியமாகும், இது எப்போதும் எளிதானது அல்ல. சோர்வடையாமல் உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
-
பிரான்சில், பல நிறுவனங்கள் வழக்கறிஞர்களுடன் இலவசச் சந்திப்புக்களை வழங்குகின்றனஅங்கு நீங்கள் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம் , சட்ட ஆலோசனையைப் பெறலாம்.
சில காப்பீட்டுக் கொள்கைகளில் உங்கள் சட்டச் செலவுகளின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் சட்டப் பாதுகாப்பு முறை காணப்படும் இது உங்கள் வீட்டுக் காப்பீடு, உங்கள் வங்கி அட்டைக் காப்பீடு, உங்கள் தொழில்முறைக் காப்பீடு அல்லது நீங்கள் எடுத்திருக்கும் வேறு ஏதேனும் காப்பீடாக இருக்கலாம். மேலும் அறிய உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
-
நீங்கள் ஒரு வழக்கறிஞரையோ அல்லது “huissier de justice” என்றழைக்கப்படும் ஒரு தொழில் வல்லுனரையோ சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றால், ஆனால், உங்கள் வளங்கள் அவற்றிற்குச் செலுத்த முடியாத அளவுக்குக் குறைவாக உள்ளதென்றால், “aide juridictionnelle” அல்லது என அறியப்படும் சட்ட உதவியால் உங்கள் சட்டச் செலவுகளின் பகுதி அல்லது முழுமையாகச் செலுத்துவதன் மூலம் நீங்கள் பயனடையலாம்.
-
சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.
- இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
- உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் அடுத்த படிமுறைகளில் உதவியைப் பெறுவதற்கும் நீங்கள் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம், உதாரணமாக: மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், சமூக வீட்டுவசதிக்கான விண்ணப்பங்கள், பிரெஞ்சு வேலையின்மை அலுவலகமான “Pôle emploi” இல் பதிவு செய்தல் போன்றவை.
- கிடைக்கின்ற மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
- தொடர்பு கொள்ளவும்: நீங்கள் “travailleur social” உடன் சந்திப்பொன்றைக் கோரலாம்:
- உங்கள் பகுதியின் “Conseil départemental”
- உங்கள் உள்ளூர் நகர மன்றத்தில் "Centre communal d’action sociale".
-
“Mairie”என்பது உள்ளூர் கொள்கைகளுக்குப் பொறுப்பான உள்ளூர் நிர்வாகமாகும். அதன் முக்கிய பங்கு சிரமத்தில் அதன் குடிமக்களுக்கு உதவுவதாகும். அவர்கள் உங்கள் உரிமைகள், கிடைக்கக் கூடிய நிதி உதவிகள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கலாம், தொடர்புடைய நிறுவனங்களுக்கு உங்களை வழிநடத்தலாம், சில நிர்வாக நடைமுறைகளிலும் கூட உங்களுக்கு உதவலாம்.
- இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
- கிடைக்கக்கூடிய மொழி: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
- தொடர்பு கொள்ளவும்: நீங்கள் வசிக்கும் நகரம் அல்லது மாநகரத்தின் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம், உங்கள் உள்ளூர் “mairie” இன் தொடர்பு விவரங்களை இந்தத் தளத்தில் காணலாம்.
-
"Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.
- இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
- வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
- கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
- உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.