Demander un document autorisant à rester en France appelé “titre de séjour”
Pour vivre et travailler en France, il est nécessaire de demander un document autorisant à rester en…
ஒரு பிரெஞ்சு குடிமகனை மணந்தவர்கள் மற்றும் பிரான்சுக்கு வந்தவர்கள் அல்லது திருமணத்தின் விளைவாக பிரான்சில் வதிவிட உரிமை பெற்றவர்கள், குடும்ப வன்முறை அல்லது பலதார மணம் கொண்ட சூழ்நிலையை அனுபவித்ததால், அவர்கள் தங்கள் மனைவியுடன் வாழ்வதை நிறுத்தினால், தங்களுடைய வதிவிட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
06/10/2023 அன்று FNCIDFF இனால் சரிபார்க்கப்பட்டது
Verified by FNCIDFF on 06/10/2023
நீங்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
பொருந்தக்கூடிய சட்டம்: “CESEDA” இன் உறுப்புறை L.423–5.
நீங்கள் விண்ணப்பிக்கும் போது வீட்டு வன்முறை அல்லது பலதார மணம் பற்றிய ஆதாரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
குடியிருப்பு அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு நிர்வாகம் அல்லது “préfecture”,வதிவிட அனுமதி அல்லது “titre de séjour”இற்கான உங்கள் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் முன் ஆதாரங்களை ஆய்வு செய்யும்.
வன்முறையை எந்த வகையிலும் நிரூபிக்க முடியும்.
உங்கள் கோப்பில் பயனுள்ள எந்தச் சான்றையும் சேகரிக்கவும், எடுத்துக்காட்டாக:
வன்முறைக்கான ஒரு குறிப்பிட்ட வகை ஆதாரத்தைக் கோருவதற்கு “préfecture” இற்கு உரிமை இல்லை. எனவே குறிப்பிட்ட ஆதாரம் இல்லை என்று கூறி உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்க அனுமதி இல்லை.
பிரான்சில், பலதார மணம் எந்த வகையிலும் நிரூபிக்கப்படலாம்:
உங்களுக்கு “vie privée et familiale” அல்லது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பிட்டு ஒரு தற்காலிக வதிவிட அட்டை அல்லது “carte de séjour temporaire” இற்கு உரிமையுண்டு. அது ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும். அது உங்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.
உங்கள் துணையுடன் வாழ்வதைத் தவிர்த்து, வன்முறையை நிரூபிக்க முடியும் என்ற நிபந்தனையின் பேரில், உங்கள் “titre de séjour” ஐ நீங்கள் இன்னும் வைத்திருக்கலாம் மற்றும் அதைப் பெறுவதற்கான நிபந்தனைகளை நீங்கள் இன்னும் சந்தித்தால், அதைப் புதுப்பிக்கலாம்.
இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் இன்னும் திருமணமானவராக இருந்தால், உதாரணமாக உங்கள் விவாகரத்து நீதிபதியால் இன்னும் வழங்கப்படவில்லை என்றால், நீங்கள் இனி உங்கள் மனைவியுடன் வாழாவிட்டாலும் உங்கள் “titre de séjour” ஐப் புதுப்பிக்க முடியும்.
வன்முறையில் ஈடுபட்டவருக்கு எதிராக நீங்கள் புகாரைப் பதிவு செய்திருந்தால் மற்றும் நடவடிக்கைகள் இன்னும் நடந்துகொண்டிருந்தால், நீங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் போது “préfecture” க்கு தெரிவிக்க வேண்டும். இது சட்டத்தால் வழங்கப்படாவிட்டாலும், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது அவர்கள் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பிரான்சில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தால், நீங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் “carte de résident” ஐக் கோரலாம். மேலும் அறியவும்
கொள்கையளவில், அல்ஜீரிய தேசியம் கொண்டவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது. நீங்கள் அல்ஜீரிய குடிமகனாக இருந்தால், பிரான்சில் உங்கள் குடியேற்ற நிலை இந்த சூழ்நிலையை வழங்காத இருதரப்பு ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஒரு பிரெஞ்சு நபரின் மனைவியாக அல்லது “conjointe de Français” ஆக, என்ற உங்கள் முதல் “titre de séjour” ஐ வழங்குவதற்கு, நீங்கள் உங்கள் மனைவியுடன் வசிக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டியதில்லை என்று இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
உங்கள் அல்ஜீரிய குடியிருப்பு சான்றிதழ் அல்லது “certificat de résidence algérien” என அழைக்கப்படும் முதல் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” ஐப் பெறுவதற்கு முன்பு வீட்டு வன்முறை காரணமாக உங்கள் துணையுடன் வாழ்வதை நிறுத்தியிருந்தால், வதிவிட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரம் அல்லது “préfecture” உங்களுக்கு சான்றிதழை வழங்கத் தேவைப்படும் பொருந்தக்கூடிய சட்டம்: 27 டிசம்பர் 1968 இன் பிராங்கோ-அல்ஜீரிய ஒப்பந்தத்தின் பிரிவு 6.2 திருத்தப்பட்டது.
“titre de séjour” இன் முதல் வெளியீட்டிற்குப் பிறகு கூட்டுவாழ்வு முடிவடைந்தால், துஷ்பிரயோகமான சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, உங்கள் “titre de séjour”ஐப் புதுப்பிப்பதற்கு “préfecture” இன்னும் ஒப்புதல் அளிக்கலாம்.
எனவே நீங்கள் குடும்ப வன்முறையை அனுபவித்திருக்கிறீர்கள் என்பதை முன்னிலைப்படுத்தவும், உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் உதவக்கூடிய ஆதாரங்களை வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
"Associations" என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகளாகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அதிகாரமளிக்கப்பட்ட சங்கங்கள் அல்லது “associations habilitées” என்பன புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சேவைகளை வழங்க முடியும்.
Demander un document autorisant à rester en France appelé “titre de séjour”
Pour vivre et travailler en France, il est nécessaire de demander un document autorisant à rester en…
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
பிரான்சில் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துதல்
சட்ட நடவடிக்கைகள் பூராகவும் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஒருவரைத்…