பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்
பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…
உங்களிடம் “titre de séjour”எனப்படும் செல்லுபடியாகும் குடியேற்ற ஆவணம் இருந்தால், நீங்கள் பிரான்சில் இருக்கும் போது அது திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, உள்ளூர் நிர்வாக அதிகாரியிடம் இருந்து“duplicata”என்ற ஆவணத்தைக் கோரலாம்.
31/01/2024 அன்று La Cimade ஆல் சரிபார்க்கப்பட்டது
Verified by La Cimade on 31/01/2024
“titre de séjour” அல்லது வதிவிட னுமதி என அறியப்படும் உங்கள் குடியேற்ற ஆவணத்தின் இழப்பு அல்லது திருடப்பட்டால், “préfecture” அல்லது“sous-préfecture” எனப்படும் உங்கள் துறையின்உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரியிடம் இருந்து நகல் அல்லது “duplicata” எனப்படும் ஆவணத்தை நீங்கள் கோரலாம்.
நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், PACS அல்லது சிவில் பார்ட்னர்ஷிப்பில் இருந்தாலும், உங்கள் “titre de séjour”ஐத் திருட யாருக்கும் அதிகாரம் இல்லை, உங்கள் துணைவருக்குக் கூட அதிகாரம் இல்லை.
என்ன செய்வது என்பது பற்றி மேலும் அறிய இந்த வினாப்பட்டியலை நீங்கள் பூரணப்படுத்தலாம்.
முதலாவதாக, உங்களுக்கு அருகிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, இழப்பு அல்லது திருட்டு குறித்து அவர்களிடம் அல்லது commissariat de police” அல்லது “brigade de gendarmerie இடம் புகாரளிக்க வேண்டும். உங்கள் “titre de séjour” இன் இழப்பு அல்லது திருட்டை உறுதிப்படுத்தும் அறிவிப்பு அல்லது “déclaration” எனப்படும் ஆவணத்தை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.
நீங்கள் விரும்பினால், உங்கள் ஆவணங்களைத் திருடிய அல்லது அழித்த நபர் மீது வழக்குத் தொடர காவல் நிலையத்தில் புகாரொன்றை தாக்கல் செய்ய முடியும் , அது உங்கள் துணைவராக அல்லது முன்னாள் துணைவராக, நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், PACS அல்லது சிவில் பார்ட்னர்ஷிப்பில் இருந்தாலும்.
புகாரைப் பதிவு செய்ய நீங்கள் தேர்வுசெய்தால்:
“duplicata” அல்லது நகலைக் கோருவதற்கான நடைமுறையைக் கண்டறிய, நீங்கள் வசிக்கும் இடத்தின் “préfecture” அல்லது“sous-préfecture” எனப்படும் உள்ளூர் பிரெஞ்சு நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த கோப்பகங்களில் நீங்கள் “préfectures” மற்றும் “sous-préfectures”இற்கான தொடர்பு விவரங்களைக் காணலாம்.
தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் விண்ணப்பிக்கும் வதிவிட அனுமதி அல்லது“titre de séjour”இற்கு நீங்கள் இன்னும் உரிமையுள்ளவரா இல்லையா என்பதை “préfecture” மறுபரிசீலனை செய்யலாம்.
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Associations” என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகள் ஆகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்
பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…