பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…
நீங்கள் தற்போது பிரான்சில் இல்லை என்றால், உங்கள் “titre de séjour”வதிவிட அனுமதியை இழந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, நீங்கள் பிரெஞ்சு தூதரகத்திடம் இருந்து மறு நுழைவு விசா அல்லது “visa de retour”என்ற ஆவணத்தை கோரலாம் எனவே நீங்கள் பிரான்சுக்குத் திரும்பலாம்.
31/01/2024 அன்று La Cimade ஆல் சரிபார்க்கப்பட்டது
Verified by La Cimade on 31/01/2024
வெளிநாட்டில் இருக்கும் போது உங்களின் வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டாலோ, பிரெஞ்சு துணைத் தூதரகத்திடம் இருந்து “visa de retour” என்ற ஆவணத்தை நீங்கள் கோரலாம், எனவே நீங்கள் பிரான்சுக்குத் திரும்பலாம்.
உங்கள் துணைவர் உங்களின்“titre de séjour”ஐத் திருடியிருந்தாலும் இந்த விதி பொருந்தும். பொருந்தக்கூடிய சட்டம்: “CESEDA”இன் கட்டுரை L.312–4.
“visa de retour”இற்கு விண்ணப்பிக்க உங்களிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போனால் அல்லது திருடப்பட்டால், நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள அதிகாரிகளிடம் முதலில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்தால், நீங்கள் இருக்கும் நாட்டின் பிரெஞ்சு தூதரகத்தைத் தொடர்புகொண்டு visa de retour”ஐக்கோரலாம். தொடர்பு விவரங்களை இந்த இணையத்தளத்தில் காணலாம்.
உங்கள் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டும்:
உங்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் பதில் கிடைக்க வேண்டும்.
உங்களுக்கு “visa de retour” வழங்கப்பட்டிருந்தால், இந்த ஆவணத்துடன் நீங்கள் பிரான்சுக்குத் திரும்பலாம்.
நீங்கள் பிரான்சுக்குத் திரும்பியவுடன், திருடப்பட்ட அல்லது தொலைந்த “titre de séjour”வதிவிட அனுமதியின் “duplicata” அல்லது நகலைக் கோர அல்லது பழையது காலாவதியாகிவிட்டால், புதிய “titre de séjour”ஐக் கோருவதற்கு ங்கள் துறையின் “préfecture” என்று அழைக்கப்படும் பிரெஞ்சு உள்ளூர் அதிகாரியுடன் சந்திப்பை மேற்கொள்ளலாம்.
தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் பிரான்சில் இருக்கும் போது நீங்கள் விண்ணப்பிக்கும் “titre de séjour”இற்கு இன்னும் உங்களுக்கு உரிமை உள்ளதா என்பதை “préfecture” மறுபரிசீலனை செய்யலாம்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், “Commission de recours contre les décisions de refus de visa”எனப்படும் பொறுப்பான சேவைக்கு மேல்முறையீடு அல்லது“recours”தாக்கல் செய்வதன் மூலம் முடிவை நீங்கள் சவால் செய்யலாம்.
இலவச சேவைகளை வழங்கும் நிறுவனம் அல்லது வெளிநாட்டினர் மீதான சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற"association" அல்லது வழக்கறிஞர் மூலம் இந்த நடைமுறையில் உதவ பரிந்துரைக்கப்படுகிறது.
“La Cimade” என்பது அனைத்து புலம்பெயர்ந்த மக்களுக்கும் பிரான்சில் உள்ள அகதிளுக்கும் குறிப்பாக வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Gisti” என்பது பிரான்சில் புலம்பெயர்ந்தோருக்கும் அகதிகளுக்குமான சட்ட ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
“Associations” என்பது பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்புகள் ஆகும். சிலர் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
பிரெஞ்சு வதிவிட உரிமைகளுக்கான எனது தகுதியைச் சரிபார்க்கவும்
இவ்வினாப்பட்டியல் உங்களுக்கு பிரான்சில் வதிவிட உரிமைகளை வழங்கக்கூடிய காரணங்களை அல்லது " fondements "…